1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (21:30 IST)

பாஜக வின் ஸ்லீப்பர்செல் கமல்ஹாசன்: எழுத்தாளர் சாருநிவேதிதா குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் திடீரென அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்தது ஏற்கனவே பலரை சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு பின்னால் ஒரு பெரிய திராவிட கட்சி இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மதம் கமல்ஹாசன் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி செய்வதாகவும் வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது பிரபல எழுத்தாளர் சாருநிவேதா கமல்ஹாசன் குறித்து ஒரு புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
 
"பாஜக வின் ஸ்லீப்பர்செல் தான் கமல்ஹாசன் என்றும், 'ஹேராம்', 'உன்னைப்போல் ஒருவன்'  என ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் படங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
 
ஆனால் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சாருநிவேதாவின் கருத்துக்கள் அந்த படத்திற்கு இலவச விளம்பரமாக பயன்படுத்தப்படுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 'விஸ்வரூபம்' முதல் பாகம் பயங்கர எதிர்ப்பு காரணமாகவே ஹிட்டானதாகவும், சாதாரணமாக அந்த படம் வெளிவந்திருந்தால் படுதோல்வி அடைந்திருக்கும் என்றும் கூறி வரும் நெட்டிசன்கள் இந்த படத்தின் விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.