ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (17:50 IST)

பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசனின் சுற்றுப்பயண விபரம்

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார் என்பதும், அன்றைய தினம் அவரது முதல் அரசியல் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசனின் சுற்றுப்பயண விபரம் குறித்த தகவலை அவரது தரப்பினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த சுற்றுப்பயண விபரங்கள்

காலை 7.45: ஏ.பி.ஜே அப்துல்கலாம் இல்லத்துக்கு வருகை

காலை 8.15: கணேஷ் மஹாலில் மீனவர்களுடன் சந்திப்பு

காலை 11.00: அப்துல்கலாம் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்

காலை 12.30: ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 2.30: பரமக்குடி ஐந்துமுனை சாலையில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 3.00: மானாமதுரையில் ஸ்ரீபிரியா தியேட்டர் அருகே பொதுக்கூட்டம்

பிற்பகல் 5.00: மதுரை ஒத்தக்கடை மைதானத்துக்கு கமல் வருகை

மாலை 6.00: கமல் தனது புதிய அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுகிறார்

மாலை 6.30: மதுரையில் பொதுக்கூட்டம் தொடக்கம்

இரவு 8.10: கமல்ஹாசனின் முதல் அரசிஅய்ல் பொதுக்கூட்ட உரை