திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (14:27 IST)

இதுமட்டும் நடந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
 
அந்த வகையில் தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று முதல் ஐந்தாம் கட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்து உள்ளார்  
 
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஆனால் தமிழகம் வெற்றி நடை போட வில்லை என்றும் தமிழகம் ஊழலில் இருப்பிடமாக இருப்பதாகவும் அதை சரி செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் கூறிய கமல்ஹாசன் விரைவில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்
 
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்