திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:25 IST)

கவிஞர் சினேகனுக்கு கமல்ஹாசன் கொடுத்த புதிய பதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார்.
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை நியவிக்கும்‌ திட்டத்தின்‌ படி எற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதைத்‌ தொடர்ந்து, மேலும்‌ கீழ்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்‌.
 
நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும்‌ 2021-ல்‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சிலத்தை, வலுப்படுத்த. கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பானர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.
 
கட்சி. தலைமை... அலுவலகத்திற்கு. வந்திருக்கும்‌, விண்ணப்பங்களிலிருந்து பதிநான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு மாநில செயலாளர் சார்பு அணி என்று அணியை அறிவித்து அதில் கவிஞர் சினேகனுக்கு இளைஞரணி பொறுப்பை கமல்ஹாசன் ஒப்படைத்துள்ளார்.