வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (08:34 IST)

நான்கில் ஒரு தொகுதியில் கமல் போட்டியா?

வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது. இருப்பினும் கமல் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் தான் போட்டியிடவில்லை என்றும், தானே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக நினைத்து தனக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்
 
இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் நான்கில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
நான்கு தொகுதி இடைத்தேர்தலின்போது அதிக பிரச்சாரம் தேவையில்லை என்பதால் கமல்ஹாசன் தாராளமாக போட்டியிடலாம் என்றும் குறிப்பாக அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது, இதுகுறித்து கமல் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.