செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (12:19 IST)

காதலை எதிர்த்த பெற்றோர்கள்; சிறுவன், சிறுமி தற்கொலை! – கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கள்ளக்குறிச்சியில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது 16 வயது மகள் நிவேதா அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்துள்ளார். அவரது வகுப்பை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற மாணவரும், நிவேதாவும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் தெரிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி கடைக்கு சென்ற நிவேதா மாயமாகியுள்ளார். இதுகுறித்து நிவேதாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோமுகி ஆற்றில் சிறுமி ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸார் அது மாயமான நிவேதா என்பதை உறுதி செய்தனர்.

அதேசமயம் அந்த பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விசாரணையில் அது நிவேதாவை காதலித்த ஹரிகிருஷ்ணன் என தெரியவந்துள்ளது. வீட்டில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.