செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:21 IST)

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை! – போலீசார் துப்பாக்கிச்சூடு!

Kallakirichi
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் போராட்டம் நடந்த இடத்தில் வன்முறை வெடித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பள்ளி மாணவி கடந்த சில தினங்கள் முன்னதாக பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாரா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று வரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டத்தில் திடீரென இன்று கலவரம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய நிலையில், போலீஸார் போராட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுளனர். பலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் காவல் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இந்த திடீர் கலவரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.