1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (16:33 IST)

அதிமுகவின் பிரிவினைக்கு ஓபிஎஸ் தான் காரணம்: கடம்பூர் ராஜு பேட்டி

kadambur
அதிமுகவின் பிரிவினைக்கு ஓ பன்னீர்செல்வம் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஓ பன்னீர்செல்வம் பிரிவு, எடப்பாடி பழனிச்சாமி பிரிவு என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
 
இதனை அடுத்து எடப்பாடிபழனிசாமி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு தீர்ப்பை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவின் பிரிவினைக்கு ஓ பன்னீர்செல்வம் தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நியாயமான தீர்ப்பு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்