ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:34 IST)

மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை எதிர்த்து தான் நாம் போராட வேண்டும்: கி.வீரமணி

மின் கட்டண உயர்வுக்கு மாநில அரசை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு எதிர்த்து தான் போராட வேண்டும் என்றும் திராவிட கழகத் தலைவர் கீ வீரமணி கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள் மத்திய அரசு எதிர்த்து தான் போராட வேண்டும் என்றும் மின்வாரியத்திற்கு ஏராளமான கடன்கள் உள்ளதால் அந்த கடன்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென்றால் உலக வங்கி உள்ளிட்டோர் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்குவோம் என நிதித்துறையை நெருக்கடி செய்த போது வேறு வழியில்லாமல் மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனால் எங்கெங்கு குறைந்த விலையில் கட்டணத்தை நிர்ணயிக்க முடியுமோ அங்கே அந்த கட்டணத்தை நிர்ணயித்து உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கி வீரமணி அவர்களின் இந்த கருத்துக்கு ’அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தியபோது மத்திய அரசை எதிர்த்தா போராடினீர்கள்? மாநில அரசை எதிர்த்து தானே போராடினீர்கள், என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva