1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (13:36 IST)

புதிய கல்வி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த குஷ்பு –சொந்த கட்சியிலேயே பலத்த எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்வி திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல்காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் .

இந்நிலையில் பாஜக அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி திட்டத்தை ஆதரித்து இது வரவேற்க வேண்டிய திட்டம் எனக் கூறினார். ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி ‘காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் கட்சி. கட்சிக்குள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் நாங்கள் பேச முடியும். கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. பொது வெளியில் பேசினால் அது அரசியல் முதிர்ச்சியற்றது, ஒழுக்கமற்றது என அழைக்கப்படுகிறது. அது விரக்தியிலிருந்து வருகிறது. அதனை குணப்படுத்த யோகா சிறந்த மருந்து’ என விமர்சனம் செய்துள்ளார்.