செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (14:09 IST)

மொழி மீது கை வைத்தால் காங்கிரஸ் போல பாஜக வீழும் – அதிமுக பிரமுகர் ஆவேசம் !

மொழி மீது பாஜக அரசு கைவைத்தால் அதற்கும் காங்கிரஸின் நிலைதான் நடக்கும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி எச்சரித்துள்ளார்.

செப்டம்பர் 14  அன்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் பலமான எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்குக் கடுமையாக எதிர்ப்புக் கிளம்பிய அதிமுக மட்டும் அடக்கி வாசித்தது. இந்நிலையில் நேற்று  நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ’இந்தியாவில் அதிகமாக பேசப்படும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது கைவத்தீர்கள் என்றால் 1937 –லும் 1967-லும் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்ததைப் போல பாஜகவுக்கும் நடக்கும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்’ என எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.