எமர்ஜென்சியே பாத்துட்டோம்.. இவர்லாம் பொருட்டே இல்ல! – அண்ணாமலைக்கு கே.என்.நேரு பதிலடி!
திமுக பிசினஸில் கை வைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு பதில் கருத்து கூறியுள்ளார் கே.என்.நேரு.
கர்நாடகாவில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சையில் போராட்டம் நடத்திய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் மீது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக அரசியலை திமுக தொடர்ந்து கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக அரசியலை கொச்சைப்படுத்தினால் திமுக பிசினஸில் கை வைப்போம் எனவும் பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அமைச்சர் கே.என்.நேரு “எமெர்ஜென்சியையே கண்ட இயக்கம் திமுக. அண்ணாமலை புதிதாக தலைவரானவர். அவரது சலசலப்புக்கெலாம் அஞ்சமாட்டோம். தவறு செய்தால்தான் பயம் தேவை” என கூறியுள்ளார்.