ஜூலியால் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கும் பெற்றோர்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜூலியால் அவரின் பெற்றோர் வெளியே தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அவரின் நடவடிக்கைகளை யாரும் ரசிக்கவில்லை. பொய் கூறுவது, நடிப்பது, பச்சோந்தி போல் செயல்படுவது என அவரின் நடவடிக்கைகள், அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஊட ஓவியா பற்றி பொய் பேசி வசமாக மாட்டிக் கொண்டு, அதன் பின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில், கிண்டியில் வசிக்கும் அவரின் பெற்றொர்களுக்கு அவரின் நடவடிக்கைகள் தலைவலியாக மாறியுள்ளதாம். ஏனெனில், அக்கம் பக்கத்தில் வசிப்பர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவரும், அவர்களிடம் ஜூலியின் தவறான நடவடிக்கை குறித்தே பேசுவதால் நொந்து போயுள்ளனராம். இதனால் வெளியே தலை காட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே, அவரின் சகோதரர் ஜோஷ்வா “என் அக்கா ஜூலிக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அவரை ஏன் அங்கு அனுப்பி வைத்தோம் என இப்போது வேதனையாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டில் கிடைத்த பெயரை அவர் கெடுத்துக்கொண்டார். அவரை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. அவரின் நடவடிக்கைகள் பற்றி கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் போடுகின்றனர். அவர் எப்போது வெளியே வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் எனது மொத்த குடும்பமே வேதனையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கே பயமாக உள்ளது” எனக் கூறியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.