செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (13:46 IST)

சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்.! வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை.!!

Savakku Sankar
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.
 
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனால் இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது என நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு தெரிவித்தது. மேலும்  இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.