ஊடகவியலாளர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை - காவல்துறை
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்றுமுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ –பாஸ் கட்டாயம் என நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்தது. இருப்பினும் திருமணம் என்ற காரணத்தைக் கூறி நிறையப்பேர் வெளியே சுற்றுவதால் இ-பாஸில் திருமணத்தை நிறுத்திவைத்துள்ளது அரசு.
இந்நிலையில், தமிழக காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊடகவியலாளர்கள், அதாவது மீடியாக்களில் பணிபுரிபவர்களுக்கு இ-பதிவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதனால் ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு செய்தி சேகரிக்கச் செல்பவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.