திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் இணையலாம் – அமைசசர் ஜெயக்குமார் பரபரப்பு!

Last Updated: திங்கள், 19 அக்டோபர் 2020 (15:59 IST)

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் இணையலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பற்றி பேச ஆரம்பித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுகவோடு மற்ற எல்லா கட்சிகளும் அணிசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ‘திமுகவில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது’ எனக் கூறியுள்ளார். இதனால் அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :