1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (13:11 IST)

ஜெ. வீடியோவை வெற்றிவேலிடம் வெளியிட சொன்னது தினகரன் தான்: போட்டுடைத்த ஆதரவாளர்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் சொல்லித்தான் வெற்றிவேல் வெளியிட்டதாக தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் ஒரு நாள் முன்பு ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவை வெளியிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இது தினகரனின் அனுமதியில்லாமல் அவருக்கு தெரியாமல் வெளியிடப்பட்டது என கூறினார்.
 
தினகரனும் இந்த வீடியோ எனக்கு தெரியாமல் வெற்றிவேல் வெளியிட்டார், அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறினார். இந்நிலையில் தினகரன் சொல்லித்தான் வெற்றிவேல் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டதாக தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
 
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜசேகரன், ஜெயலலிதா வீடியோவை வெற்றிவேலிடம் கொடுத்து வெளியிட சொன்னது தினகரன் தான். வெற்றிவேல் கூட தயங்கினார். ஆனால் நான் தான், வெளியிடுங்கள் வெற்றிவேல், வழக்கு தானே போடுவார்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன் என கூறியுள்ளார். ஆனால் இது தவறான தகவல் என தினகரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.