வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (05:44 IST)

ஜெயலலிதாவுக்கு இது தான் கடைசி தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவுக்கு இது தான் கடைசி தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இது தான் கடைசி தேர்தல் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பிரசாரம் செய்ய உள்ளேன். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, சல்மான் குர்ஷித், ராஜேஷ் பைலட் ஆகியோர் வருகின்றனர்.
 
தமிழகத்தில், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம், கைப்பற்றிய பணத்தின் முழு விபரத்தையும் வெளியிட வேண்டும்.
 
தேர்தல் தோல்வி பயம் காரணமாக அதிமுகவில் வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர். எனவே, எனக்கு தெரிந்து, ஜெயலலிதா சந்திக்கும் கடைசி தேர்தல் இது தான்.  தேர்தலுக்கு பின்பு அவர் அனுப்பப்பட வேண்டிய இடத்திற்கு அனுப்படுவார் என்றார். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்