செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (10:12 IST)

போயஸ் கார்டன் வீட்டில் தங்க மறுக்கும் தினகரன்: நீங்களும் போகாதிங்க!

போயஸ் கார்டன் வீட்டில் தங்க மறுக்கும் தினகரன்: நீங்களும் போகாதிங்க!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் இறந்த பின்னர் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கி வந்தனர். ஆனால் தற்போது அங்கு யாரும் தங்குவதில்லையாம். இதனால் அங்குள்ள சமையல் அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது தோழி சசிகலா ஏன் அங்கு இருக்கிறார் என குற்றம்சாட்டப்பட்டது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரது போயஸ் கார்டன் இல்லம் யாருக்கு சொந்தம் என்ற மர்மம் இன்னமும் விலகாமல் உள்ளது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தின் பால்கனியில் இருந்து ஜெயலலிதா இறந்த பின்னர் தொண்டகளுக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் கையசைத்து வணக்கம் தெரிவித்தனர்.
 
இது சசிகலாவின் எதிர் தரப்பினரை எரிச்சலூட்டியது. ஆனால் தற்போது சசிகலா சிறைக்கு சென்று விட்டதால் அவரது குடும்ப உறுப்பினர்களும் போயஸ் கார்டன் செல்வதை தவிர்த்து விட்டனர். டிடிவி தினகரனும் போயஸ் இல்லத்தில் தங்க மறுத்து வருகிறார்.
 
பெசண்ட் நகரில் உள்ள பங்களாவில் தான் சசிகலா உறவுகள் தற்போது இருக்கிறார்களாம். தினகரனும் அங்கு தான் இருக்கிறாராம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் போயஸ் கார்டன் செல்ல வேண்டாம் எனவும் தினகரன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பது புரியாமல் போயஸ் இல்லத்து ஊழியர்கள் உள்ளனர்.
 
ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திக் உள்பட 20 ஊழியர்கள் தினமும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது சில ஊழியர்கள் வந்து சுத்தம் செய்து பராமரித்து வருகின்றனர்.