செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 19 மே 2016 (09:13 IST)

ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: ஜோதிடர்கள் கணிப்பு

அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என ஜோதிடர்கள் கருத்து கூறியுள்ளனர். துன்முகி வருடம் ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருப்பதாக கூறியுள்ளனர்.


 
 
ஒட்டு மொத்த தமிழகமும் இன்று சட்டசபை தேர்தல் முடிவை எதிர் நோக்கியுள்ளது. இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சியில் ஜோதிடர்களை வைத்து ஜெயலலிதாவின் ராசிக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும் என நேரலை நிகழ்ச்சி நடத்தினர்.
 
இதில், ஜெயலலிதாவின் ராசிப்படி லக்னத்திற்கு 6-ஆம் இடத்தில் சனி இருப்பதால் எதிரிகள் நசிந்து போவார்கள். அம்மாவிற்கு வெற்றியே கிடைக்கும் என்றார் ஒரு ஜோதிடர்.
 
மேலும் ஜெயலலிதா 25 வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, பதில் கூறிய ஜோதிடர், கேது என்பது புரட்சிகளை கொடுக்க கூடிய கிரகம். அன்றைய தினம் 7, 2 என்ற அமைப்புப்படி இருக்கிறது. ஏழு மிகவும் ராசியானது சிறப்பான மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளனர்.
 
வாஸ்துபடி ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்றும். துன்முகி வருடமானது ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருக்கிறது. அவர் நிச்சயம் ஆட்சிமைப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.