திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (17:07 IST)

ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்... பொன்னையன் பகீர் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டதாகவும், அதற்கான சாட்சி கன்னத்தில் காயங்கள் இருந்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக இரு அணிகள் ஒன்று சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் அணி சசிகலா தரப்பினர் அனைவரும் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி அணி 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:-
 
ஜெயலலிதா மருத்துவமனையில் மயங்கிய நிலையில்தான் கொண்டு செல்லப்பட்டார். போயஸ் கார்டனில் ஸ்டாம் பேப்பரில் கையெழுத்து போட ஜெயலலிதா மறுத்ததால் அவர் தாக்கப்பட்டார். 
 
கன்னத்தில் இருந்த காயங்கள் அதற்கு சாட்சி. ஜெயலலிதா தாக்கப்பட்டதைக் கண்ணிலே பார்த்த வேலை செய்த பணியாள் இன்றுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, என்றார்.