செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (15:35 IST)

ஜெயலலிதா உருவப்படத்தை நீக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் வைக்கக்கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
சட்டபையில் கடந்த பிப்ரவரி மாதம் 12 தேதி சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் சிலை வைக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன. இதனை எதிர்த்து திமுகவின் சார்பில் ஜெ.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் ஜெ. படம் நிறுவப்பட்டது, சபாநாயகரின் முடிவு என்பதால் சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தீர்ப்பளித்துள்ளது.