வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (14:48 IST)

சசிக்கலாவுக்கு கார் குடுத்தது யாரு? – கொலை காண்டான அதிமுக!

பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிக்கலாவிற்கு அதிமுக நிர்வாகியின் கார் பயணிக்க அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சசிக்கலா அதிமுக கொடி தாங்கிய வாகனத்தில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த கார் அதிமுகவை சேர்ந்த ஒருவருடையது என்றும், அதனால் அதில் அதிமுக கொடி இருப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவிற்கு அதிமுக கொடி உள்ள காரை கொடுத்த அதிமுகவினர் எட்டப்பர்கள். அவர்களை கட்சி தலைமை களையெடுக்கும்” என கூறியுள்ளார்.