செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:33 IST)

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக? ஜெயகுமார் பேட்டி..!

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ள ஜெயக்குமார் அதில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கு சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தமிழகத்தை பொறுத்தவரை அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது என்றும் ஆனால் அதில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Siva