1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (13:55 IST)

அறுவை சிகிச்சை நேரு ஸ்டேடியம்ல பண்ணனுமா? அமைச்சர் கேள்விக்கு ஜெயகுமார் பதிலடி..!

jayakumar
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படை தன்மை இல்லை என்ற கேள்விக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் பண்ண வேண்டுமா? 15,000 பார்வையாளர்கள் முன்னிலையில் யாராவது அறுவை சிகிச்சை செய்வார்களா? என்று பதில் அளித்தார். 
 
 இது குறித்து தனது கருத்தை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உண்மையிலேயே பிளாக் இருந்ததா? ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டதா? அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது 
 
மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்திற்கு பொறுப்பான பதிலை அமைச்சர் அளிக்க வேண்டும். அவரது இந்த பதில் மிகவும் பொறுப்பற்ற தன்மையாக இருக்கிறது. இந்த பதில் காரணமாக அரசுக்கு இன்னும் கெட்ட பெயர் தான் ஏற்படும் என்று கூறினார்.
 
Edited by Mahendran