புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (19:07 IST)

காசிமேடு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: ஜெயகுமார் கோரிக்கை

jayakumar
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புயல் காரணமாக சேதமடைந்த காசிமேடு மீனவர்கள் படகு உரிமையாளர்கள் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran