வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:54 IST)

ஐபிஎல் போட்டியை பார்க்க செல்பவர்கள் தமிழின எதிரிகள்: பிரபல இசையமைப்பாளர்

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் பார்க்க செல்பவர்கள் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி அவர்கள் தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் இருப்பார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டியை பார்க்க யாரும் மைதானத்திற்கு செல்லாமல் இருந்தால் காவிரி பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று கூறியிருந்த ஜேம்ஸ்வசந்தன் தற்போது தமிழகத்தின் எதிரிகள் மட்டுமே ஐபிஎல் போட்டியை பார்க்க செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  இதுகுறித்து மேலும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளதாவது:
 
தன்மானமுள்ள மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளைக் கேட்டப் பிறகாவது சிந்திக்க வேண்டும்
 
நாளை ஸ்டேடியத்தில் இவைகளுக்குத் தடை:
1. கருப்பு உடை
2. செல்போன்
3. கேமரா
4. இசைக்கருவி
5. அட்டை
6. பேனர்
7. கொடி
8. தண்ணீர் பாட்டில்
9. உணவு
10. சூடு/சுரணை
 
இதையும் தாண்டி நாளை உள்ளே செல்பவர்கள் பிஜேபி ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று விமரிசனம் செய்துள்ளார்.