திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (17:54 IST)

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு: 5500 வீரர்கள் பதிவு என தகவல்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இதுவரை 5500 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஜனவரி 16ஆம் தேதி நடைபெற வேண்டிய அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் முன்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது 
 
இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் பதிவில் 5500 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.