புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (14:42 IST)

ஒரே நாடு இருக்கலாம்… ஆனால் ஒரே மொழி இருக்க முடியாது – ஜக்கி வாசுதேவ் கருத்து !

இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வரும் வேளையில் பாஜக ஆதரவாளர் எனக் கூறப்படும் ஜக்கி வாசுதேவ் அதை எதிர்க்கும் விதமாக பேசியுள்ளார்.

நேற்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்ட வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் பலமான எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் காவிரிக் கூக்குரல் என்ற பெயரில் பேரணி நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் திருவாரூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ‘மொழிகளை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் மாநி லங்கள் பிரிக்கப்பட்டன. ஒரே நாடு இருக்க வேண்டுமேயொழிய ஒரே மொழி இருக்க முடியாது. 3000 மொழிகளை இந்தியாவில் பேசி வருகிறோம். அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை. குறைந்ததை 4 மொழிகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.