வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (11:45 IST)

சிறையில் நிர்மலாதேவிக்கு பாலியல் தொல்லை – தற்கொலைக்கு முயற்சி ?

சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரு வருடமாக ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்தும் அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. என்னை மிரட்டி தான் வாக்குமூலம் பெற்றாரகள் என நிர்மலா தேவி சமீபத்தில் கூறி பரபரப்பைக் கிளப்பினார். மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்  IAS அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பிருப்பதால் நிர்மலாதேவிக்கு ஜாமின் கொடுக்காமல் இருக்கின்றனர் என நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பிருப்பதாக நக்கீரன் பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டு பரபரப்புகளைக் கிளப்பியது. இது சம்மந்தமான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர்.

நிர்மலாதேவி வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இது சம்மந்தமாகப் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் ‘சிறையில் பாலியல் தொல்லை உட்படப் பல சித்ரவதைகள் நிர்மலாதேவிக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சிறையில் அவரைக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதனால் காயங்கள் வெளியேத் தெரியக்கூடாது என்பதால்தான் இன்று அவரை ஆஜர்படுத்தவில்லை. சிறையில் அவர் தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் இன்னும் ஏன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.