1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (10:19 IST)

ஒரே நாளில் ஓய்வு பெறும் இறையன்பு, சைலேந்திரபாபு.. அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் யார்?

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழகத்தின் டிஜிபி,  சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஒரே நாளில் ஓய்வு பெற இருப்பதை அடுத்து இந்த பதவிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகள் முன்னால் பதவி ஏற்றபோது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். 
 
அதேபோல் தமிழகத்தின் டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஓய்வு பெற உள்ளனர் 
 
தமிழகத்தின் இரு பெரும் பதவிகளில் அடுத்து வருபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran