ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (20:44 IST)

அமைச்சர் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை... முக.ஸ்டாலின் டுவீட்

தமிழக அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை விரைந்து முழு நலன் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று பரவியது. இதில்,  மக்கள் முதற்கொண்டு நடிகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் இன்னும் கொரோனா தொற்று ஓயவில்லை.

இந்நிலையில்  அமைச்சர் காமராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் @RKamarajofl அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அறிந்தேன்.அவர் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.