திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (23:16 IST)

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வு!

சமீப காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து நிகழாத வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பட்டாசுகளில் ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதை ஒட்டி இதற்கான முன்னேற்பாடாக அமைச்சர் இதை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.