திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (21:34 IST)

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் CEO-க்களின் பட்டியல் வெளியீடு!

Wipro telaport
உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களுக்கு  சம்பளம் கோடிக் கணக்கில் வழங்கப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ நாதெல்லா, டெஸ்லா சி.இ.ஓ எலான் மக்ஸ் உள்ளிட்டோர் உலகம் அறிந்த பிரபல சி.ஓக்களாக உள்ளனர். பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கிய சி.இ.ஓக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ தியரி டெலாபோர் முதலிடத்தில்  உள்ளார்.

இவர் வருடம் ரூ.82 கோடி சம்பளம் பெறுவதாகவும், இன்போசிஸ் சிஇஓ சலீல் பரெக் ரூ.58.45 கோடி சம்பளம் பெறுவதாகவும், டெக், மகிந்திரா சிஇஓ சிபி குர்னானி ரூ30 கோடி சம்பளம் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.