1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (07:39 IST)

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து சுமார் மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படை சார்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த சாகச நிகழ்ச்சி, மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் விடிய விடிய செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படையில் விமான சாகச நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 92 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதனை கொண்டாடும் வகையில் இன்று மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 72 வகையான ஏரோபாட்டிக் சாகசங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.


Edited by Siva