50 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி செலுத்தினர்! – இந்தியா சாதனை!
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் 50 சதவீதம் இலக்கை எட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்தது.
தற்போது வரை நாட்டில் 127,61,83,065 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி முறையே 47,71,11,313 ஆக உள்ளது. இதன்மூலம் இந்தியா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் 50 சதவீதம் என்ற இலக்கை எட்டியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, லடாக், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கை அடைந்து சாதனை புரிந்துள்ளன.