1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (10:00 IST)

சுதந்திர தின ஒத்திகை: சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்! - முழு விவரம்!

Traffic

சென்னையில் சுதந்திர தினத்திற்காக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

சுதந்திர தினவிழா, 15.08.2024 ஆம்‌ தேதி சென்னை கோட்டையில்‌ நடைபெறுவதை முன்னிட்டு, 05,09,13.08.2024 ஆகிய நாட்களில்‌ அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால்‌ காலை 06.00 மணி முதல்‌ நிகழ்ச்சி முடியும்‌ வரை கீழ்க்கண்ட சாலலகளில்‌ தற்பொழுது நடைமுறைகளில்‌ உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில்‌ மாற்றி அமைக்கப்படவுள்ளது.

 

1. உழைப்பாளர்‌ சிலை முதல்‌ போர்‌ நினைவுச்சின்னம்‌ வரை அமையப்‌ பெற்றுள்ள காமராஜர்‌ சாலை போர்‌ நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ்‌ வங்கி சுரங்கப்மாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும்‌ கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில்‌ வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர்‌ தவிர மற்ற அனைத்து வாகனங்களின்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

2. காமராஜார்‌ சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ உழைப்பாளர்‌ சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம்‌, முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம்‌ சந்திப்பு மற்றும்‌ வடக்கு கோட்டை பக்க சாலை (145 5090] வழியாக பாரிமுனைலய சென்றடையலாம்‌.

 

3. பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை, தலைமைச்‌ செயலகம்‌ வழியாக காமராஜர்‌ சாலை நோக்கி செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ பாரிஸ்‌ கார்னர்‌, வடக்கு கோட்டை பக்க சாலை, (145 5090] (இராஜா அண்ணாமலை மன்றம்‌ சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம்‌, அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர்‌ சாலையை சென்றடையலாம்‌.

 

4. அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும்‌ வாகனங்கள்‌ முத்துசாமி பாலம்‌, முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம்‌ சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்‌. முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார்‌ சாலை செல்லும்‌ வாகனங்கள்‌ அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர்‌ சாலையை சென்றடையலாம்‌.

 

5. சிவப்பு மற்றும்‌ பர்பிள்‌ வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர்‌ காலை 08.30 மணிவரை (இராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச்செயலக உள்வாயிலின்‌ அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில்‌ ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ நிறுத்த வேண்டும்‌.

 

6. சிவப்பு மற்றும்‌ பர்பிள்‌ வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர்‌ காலை 08.30 மணிக்கு பின்னர்‌ காமராஜர்‌ சாலை, உழைப்பாளர்‌ சிலையிலிருந்து வாலஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, முத்துசாமி பாலம்‌, முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ்‌ வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின்‌ அருகே இறங்கிக்‌ கொண்டு வாகனங்களை தலைமைச்‌ செயலகத்திற்கு எதிரில்‌ உள்ள !?4/0 வாகன நிறுத்தத்தில்‌ நிறுத்த வேண்டும்‌.

 

7. நீல மற்றும்‌ பிங்க்‌ வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர்‌ காலை 08.30 மணிவரை இராஜாஜி சாலை, போர்‌ நினைவுச்‌ சின்னம்‌, கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம்‌, முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ்‌ வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின்‌ அருகே இறங்கிக்‌ கொண்டு வாகனங்களை தலைமைச்‌ செயலகத்திற்கு எதிரில்‌ உள்ள [74/0 வாகன நிறுத்தத்தில்‌ நிறுத்த வேண்டும்‌.

 

8. நீல மற்றும்‌ பிங்க்‌ வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர்‌ காலை 08.30 மணிக்கு பின்னர்‌ காமராஜர்‌ சாலை, உழைப்பாளர்‌ சிலையில்‌ இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம்‌, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ்‌ வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச்‌ செயலகத்திற்கு எதிரில்‌ உள்ள [?//0 வாகன நிறுத்தத்தில்‌ நிறுத்த வேண்டும்‌.

 

9. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில்‌ வருவோர்‌ போர்நினைவுச்‌ சின்னம்‌ அருகில்‌ (இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில்‌ உள்ளே நிறுத்த வேண்டும்‌. அனைத்து வாகன ஓட்டிகளும்‌ தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

 

Edit by Prasanth.K