மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. சென்னையில் பரபரப்பு..!
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பசுமை எரிசக்தி பிரிவில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். டிடிஎஸ் வரி பிடித்தலில் குளறுபடி ஏற்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து முக்கிய விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edied by Mahendran