செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (10:58 IST)

ஜெகத்ரட்சகன் வீட்டில் 40 கிலோ தங்கம்; 18 கோடி ரூபாய் பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனை இன்று முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் 40 கிலோ தங்கம், 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 
 
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனை இன்று முடிவுக்கு வந்தது. ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாத வருமான வரித்துறைக்கு வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
 
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை, மருத்துவக் கல்லூரி, விடுதிகள், தி.நகர் அலுவலகம், அடையாறு, நுங்கம்பாக்கம், மகாபலிபுரம் வீடுகள் உட்பட 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது.
 
இந்த அதிரடி சோதனையில் 200 அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ஜெகத்ரட்சகன் சுமார் 600 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
 
இன்று இந்த சோதனை நிறைவடைந்ததை அடுத்து ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 40 கிலோ தங்கத்தையும், கணக்கில் வராத 18 கோடி ரூபாயும் வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஜெகத்ரட்சகன் முழு ஒத்துழைப்பு தந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.