1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (13:23 IST)

எந்தெந்த மாவட்டங்களில் எந்த கட்சிகள் முன்னிலையில் உள்ளது..?

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-தேதியன்று (2021) நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, மே 2-ஆம் தேதி அதாவது இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தற்போதுள்ள நிலவரப்படி....
 
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக 142 (திமுக 117, காங்கிரஸ் 13, மதிமுக 3, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 3, மற்றவை 2) இடங்களையும், அதிமுக 91 இடங்களையும் (அதிமுக 78, பாஜக 5, பாமக 7, பிற 1), மநீம 1, அமமுக 1 இடங்களையும் பெற்றுள்ளது.
 
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸும், ஈரோடு மேற்கு மற்றும் அந்தியூரில் திமுகவும். மொடக்கிறிச்சி, பெருந்துறை,  பவானி, கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
 
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகளில் சேந்தமங்கலம், நாமக்கலில் திமுகவும். திருச்செங்கோட்டில் கொமதேகவும், இராசிபுரம்(தனி), பரமத்தி-வேலுர்,  குமாரபாளையம் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
 
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகளில் சங்ககிரி மற்றும் சேலம் (வடக்கு)-ல் திமுகவும். சேலம் (மேற்கு)-ல் பாமகாவும், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி),  ஏற்காடு (எஸ்டி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் திமுகவும். கள்ளக்குறிச்சியில் (தனி)  அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவில்லூரில் திமுகவும். மயிலத்தில் பாமகாவும்,  திண்டிவனம்(தனி) மற்றும் வானூர் (தனி), ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், வந்தவாசி ஆகிய இடங்களில்  திமுகவும். போளூர், ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.