செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (17:31 IST)

கல்கி அவதாரத்திற்கு பதில் கொரோனா அவதாரம்: டாக்டர் கமலா செல்வராஜ்

பெருமாளின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்திற்கு பதிலாக இந்த கலியுகத்தில் கொரோனா அவதாரம் எடுத்துள்ளார் என பிரபல டாக்டரும் நடிகர் ஜெமினி கணேசன் மகளுமான கமலா செல்வராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:
 
கலிகாலம் ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கல்கி அவதாரத்திற்கு பதில் பகவான் கொரோனா அவதாரம் எடுத்துள்ளார்.. 400 வருஷத்துக்கு முன்பே ஒரு சித்தர் கூறினார். மனிதன் பாம்பை எப்போது சாப்பிடுகிறோனா அப்போதே அவனுக்கு அழிவுதான் என்று. அது இப்போது உண்மையாகிவிட்டது. 
 
சீனாவில் கொரோனா ஆரம்பித்தாலும் அங்கே தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.  ஆனால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. நம் அரசாங்கம் நிறைய செய்தாலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை இந்தியர்கள் என்று கூறி உள்ளே விட்டது ரொம்ப தப்பு. விமான நிலையத்திலே அவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். வெறும் சளி, காய்ச்சல் டெஸ்ட் மட்டும் எடுத்துவிட்டு உள்ளே விட்டதால் இந்த விபரீதம். இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும். என்ன பண்ண போகிறோம் என்று தெரியவில்லை. இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டாக்டர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்