1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (07:12 IST)

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் 549 மனுக்களுக்கு தீர்வு!

தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடக்கி வைத்து இதற்கென ஐஎஎஸ் அதிகாரி ஒருவரையும் நியமனம் செய்தார். இதில் 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 549 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இவர்களில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவி தொகை ஆகியவைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மனுக்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த மனுக்கள் அனைத்துக்கும் தீர்வு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் தீர்வு பெற்றவர்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது