திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (11:59 IST)

ஐஐடி மாணவி தற்கொலை: பேராசிரியர் சுதர்ச பதமநாபன் வெளியேற தடை!

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் சுதர்ச பத்மநாபன் கல்லூரியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீம் கடந்த 9ம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் தன் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் குறித்து மொபைலில் பதிந்து விட்டிருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தற்போது சிபிஐ விசாரணைக்கு வந்துள்ளது.

மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீம் முதல்வரை சந்தித்து புகார் அளித்தார். இந்நிலையில் பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களாக கருதப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் பிற பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை முடியும் வரை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற போலீஸார் தடை விதித்துள்ளனர்.