திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (08:57 IST)

தமிழகம் பாதுகாப்பானது என நம்பினோம்! – ஐஐடி பாத்திமா தாயார் உருக்கம்!

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐஐடி தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார். பேராசிரியரின் தொடர் தொல்லைகளால் மனவிரக்தி அடைந்த பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தனது செல்போனில் தற்கொலைக்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார் பாத்திமா.

பாத்திமாவின் தற்கொலை குறித்து அவரது தாயார் பேசியபோது “வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்து வருவதால் எங்களது பெண்ணை அங்கே படிக்க அனுப்ப பயமாக இருந்தது. அவளுக்கு பனாரஸில் சீட கிடைத்தபோதுகூட வேண்டாம் என மறுத்து விட்டோம். ஆனால் தமிழகம் அப்படி இல்லை என்று நினைத்தோம். எனது மகள் சென்னையில் பாதுகாப்பாக படிக்க முடியும் என்று நம்பினோம்” என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

பாத்திமா தற்கொலை வழக்கில் 11 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.