திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (14:08 IST)

வங்கியில் பணம் செலுத்தினால் ….2 மாதம் கூட ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் – கே.எஸ். அழகிரி

கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்திற்கு ஊரடங்கு காரணமாக அனுமதி இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்

இந்நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் காவல்துறையின் இந்த முடிவுக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது :

வங்கியில் பணம் செலுத்தினால் ஒருமாதம் என்ன? 2 மாதம் கூட ஊரடங்கை கடைப்பிடிக்கலாம்; அரசுக்கு ஆலோசனை அளிக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது; எதிர்க்கட்சிகளின் அவசியமான கருத்துகளை மட்டுமே அரசு எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இன்று கூடுவதால இருந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் , நடைபெறாத நிலையில்,  ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.