செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (15:36 IST)

எம்எல்ஏ, எம்பி தேர்தலில் உதயநிதி ஸ்டாலின்?

சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தீவிர அரசியலில் குதித்துவிட்டார். திமுக நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளும் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 
 
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தார். ஆனால் தற்போது திடீரென அவர் அரசியலில் குதித்துவிட்டார். ஏற்கனவே திமுக மீது குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
 
கருணாநிதி, அவரது மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி, பேரன் தயாநிதி மாறன் என திமுகவில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம் பெருக திமுக மீது குடும்ப அரசியல் முத்திரை குத்தப்பட்டது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலில் குதிக்க இந்த குடும்ப அரசியல் வாதம் அதிகமாகியுள்ளது.
 
இந்நிலையில் அரசியலில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அல்லது எம்பி தேர்தலில் நிற்க மாட்டேன் என பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா அரசை மோசம் எனவும், எடப்பாடி பழனிச்சாமி அரசை படுமோசம் எனவும் விமர்சித்துள்ளார்.