வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (20:41 IST)

தொகுதி பக்கமே போகல, அதனால் திருவாடனையில் போட்டியில்லை: கருணாஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்பதால் மீண்டும் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் வெட்டவெளிச்சமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை  என்ற அமைப்பின் மூலம் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் அந்த தொகுதியில் அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என கருணாஸ் பேட்டியளித்துள்ளார்
 
கடந்த இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே நான் செல்லவில்லை என்பதால் மீண்டும் நான் திருவாடனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அவர் வெட்டவெளிச்சமாக கூறியுள்ளார் 
 
மேலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய சொந்த தொகுதிக்கு கடந்த இரண்டு வருடங்களாக செல்லாமல் இருக்கும் கருணாசுக்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தனது தவறை வெட்டவெளிச்சமாக ஒப்புக் கொண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டி இல்லை என்று கூறி அவருடைய கள்ளங்கபடமில்லாத மனதை ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர்