1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:14 IST)

மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

பெண்களுக்கான வார்டில் ஒரு ஆண் போட்டியிட்டு துணைத்தலைவராகும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது என் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் போட்டியிட்டு வென்ற கிருஷ்ணமூர்த்தி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி என   கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் மாநிலம் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாஅநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரைவிட்டு வழக்கை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
 
இதனைதொடர்ந்து தன்னுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.