சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை!

sasikala
சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை!
siva| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (10:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், நுரையீரல் தொற்று இருப்பதாகவும், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததாகவும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார். இருப்பினும் மற்ற
நோய்களுக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது
இந்த நிலையில் தற்போது விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரே உணவை உட்கொள்வதாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறைந்து காணப்படுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :