கோபி, சத்தி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Annakannan| Last Modified செவ்வாய், 28 அக்டோபர் 2014 (11:24 IST)
தொடர் மழையின் காரணமாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதிலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வனப் பகுதியில் இருந்து வரும் குட்டைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, பல்வேறு சாலைகளில் தரைப் பாலங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
தொடர்ந்து சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் லேசாக மழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :